ADDED : பிப் 05, 2026 03:24 AM
தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு, சுமுகமாக நடந்து வருகிறது. பேச்சு நடத்த தி.மு.க., சார்பில் விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவில் உள்ளவர்களுடன் தொடர்ந்து பேசுவோம்.
'எப்ஸ்டீன் பைல்ஸ்' விவகாரத்தில் விசாரணை குழு அமைத்து, தான் நிரபராதி என பிரதமர் நிரூபிக்க வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், தமிழக மக்கள் பா.ஜ.,வை ஏற்க மாட்டார்கள் என்பதை அறிந்தே, தமிழகத்தை முழுதும் புறக்கணித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையே மறந்துவிட்டனர். ஆகவே, மோடி அரசுக்கும் பா.ஜ.,வுக்கும் என்றைக்கும் தொங்கு சதையாக இருக்கிற அ.தி.மு.க., உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
- செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,
