ADDED : மார் 22, 2025 03:47 AM

தமிழகத்தில் அ.தி.மு.க.,வின் அமைப்பு ரீதியிலான 82 மாவட்டங்களிலும் தொடர் திண்ணைப் பிரசாரம் நடந்து வருகிறது.
தி.மு.க., அரசின் நாலரை ஆண்டு கால வேதனைகளை பட்டியலிட்டு, கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திண்ணைப் பிரசாரம் வாயிலாக மக்களை மாநிலம் முழுதும் சந்தித்து, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். அதை ஆர்வமுடன் பெற்றுச் செல்லும் பொதுமக்கள், துண்டு பிரசுரங்களை படித்துவிட்டு, தி.மு.க., ஆட்சியின் வேதனைகளை அ.தி.மு.க.,வினருடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், தமிழகத்தின் ஸ்டாலின் குடும்பம், ஆட்சிப் பொறுப்பில் இருந்து விரைவில் விரட்டி அடிக்கப்படும். அதற்காக, வரும் 2026 சட்டசபை தேர்தல் வரை, அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு லட்சம் பேரிடம் துண்டு பிரசுரம் வழங்கி, திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
-உதயகுமார், முன்னாள் அமைச்சர்