ADDED : மார் 04, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : நாடு முழுதும் இன்ஜினியரிங், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற படிப்புகளை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம், உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்.
வரும் கல்வியாண்டு முதல், பி.பி.ஏ., - பி.சி.ஏ., போன்ற படிப்புகளை நடத்தவும் அங்கீகாரம் பெற வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் முடிவதாக இருந்தது. பல்வேறு கல்லுாரிகளின் கோரிக்கையை ஏற்று, வரும், 7ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

