ADDED : டிச 13, 2025 01:29 AM
விருதுநகர்: தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி எய்ட்ஸ் தடுப்பு திட்ட அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் 2026 ஜன., 4 சென்னை யில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து விருதுநகரில் சங்க மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் கூறியதாவது:
தமிழகத்தில் 1992ல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் துவங்கப்பட்டது. அந்நாள் முதல் தற்போது வரை அதில் பணிபுரியும் ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவில்லை. மாநிலம் முழுதும் 2500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தி ஜன.,4ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
தி.மு.க., அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதி எண் 153ன் படி ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் என்ன ஆனது. இதுகுறித்து அரசிடம் கேள்வி எழுப்பியதற்கு அதற்கு வாய்ப்பில்லை என பதில் வந்துள்ளது. அரசு ஒப்பந்த ஊழியர்களான எங்களை ஏமாற்றாமல் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

