sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

/

 எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

 எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

 எய்ம்ஸ் கட்டுமான பணி முடியவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்


ADDED : பிப் 11, 2026 06:49 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக சொல்ல முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான, 'கேத்லேப்' கருவி மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:

விரைவில், கடலுார், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் என, ஐந்து இடங்களில், புதிய 'கேத்லேப ் ' அமைக்கப்படும். மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு, கேத்லேப் வாயிலாக அடைப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, ரத்த ஓட்டம் சீராக்கப்படும். இதய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல், இதயநாள அடைப்புகளை அகற்ற, இக்கருவி பயன்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணி முடியும் நிலையில் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு பிளாக் மட்டுமே கட்டி உள்ளனர். முழுமையாக பணிகள் முடிய, 2028ம் ஆண்டு வரை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us