ADDED : ஆக 13, 2025 03:44 AM
சென்னை: இந்திய விமானப் படைக்கு, அக்னிவீர் வாயு திட்டத்தில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முகாம், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடக்க உள்ளது.
ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருமணமாகாத இளைஞர்கள், அக்னிவீர் திட்டத்தின் படி, ராணுவம், விமான படையில் சேருவதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு, செப்., 2, 3ம் தேதிகளில் ஆட்கள் தேர்வு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடக்கிறது.
தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு, வரும் 27, 28ம் தேதி களிலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு, வரும், 30, 31ம் தேதிகளிலும் தாம்பரத்தில் முகாம் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.