10 நாட்டு விமானப்படை கோவை வரப்போகுது: விஷயம் தெரியுமா மக்களே!
10 நாட்டு விமானப்படை கோவை வரப்போகுது: விஷயம் தெரியுமா மக்களே!
ADDED : ஆக 05, 2024 05:53 PM

கோவை: கோவை, சூலூரில் நாளை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 14 வரை விமானப்படை சார்பில், 'தாரங் சக்தி' பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்க 51 நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது; 10 நாட்டு விமானப்படையினர் பங்கேற்கின்றனர்.
கோவை மாவட்டம் சூலூரில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 'தாரங் சக்தி' பயிற்சியை விமானப்படை நடத்த உள்ளது. பயிற்சியில் பங்கேற்க மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளன. 2ம் கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கண்காட்சி
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவும் இந்த பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா வரவில்லை. இந்த பயிற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறமையை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. பயிற்சி நடக்கும் போது சூலூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இரு இடங்களில் 'மேட் இன் இந்தியா' கண்காட்சியும் நடைபெற உள்ளது.