ADDED : ஆக 22, 2024 06:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நூல் உரிமை தொகையின்றி கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படுகிறது. தனியொரு மனிதரால் இவ்வளவு படைப்புகளை வழங்க முடியுமா எனும் வண்ணம் கருணாநிதி சாதனை படைத்து உள்ளார். 76 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும். 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.