ADDED : நவ 03, 2025 05:10 AM

மூன்றாவது முறையாக, இந்தியாவை பா.ஜ., ஆளுகிறது. இத்தனை ஆண்டுகளாக , வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்து கொண்டு இருக்கிறது. அப்போதேல்லாம் சீர்திருத்தம் செய்யாமல், இப்போது, எஸ்.ஐ.ஆர்., முறையை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தமிழகம், கேரளா போன்ற பா.ஜ.,விற்கு அதிகாரம் இல்லாத மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே, நாங்கள் புகார் அளித்தபோது, தேர்தல் கமிஷன் காதிலேயே வாங்கவில்லை.
தி.மு.க.,வின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதால் ஒரு பயனுமில்லை. அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தால், எந்த பலனும் கிடையாது. தமிழகத்தில் இருக்கும் வட இந்தியர் எண்ணிக்கையும், ஓட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கையும் அரசிடம் உள்ளதா? தமிழகத்தில், தமிழால் யாரும் ஒற்றுமையாக இல்லை; வட மாநிலத்தவர், ஹிந்தி என்ற மொழியால் ஒற்றுமையாகி விடுவர். எனவேதான், அவர்களை நான் எதிர்க்கிறேன்.
-- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

