ADDED : பிப் 26, 2024 11:55 PM
திருநெல்வேலி : ''சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும், போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும்,'' என திருநெல்வேலியில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
கும்பகோணத்தில் பிப்., 24ல் நடந்த ச.ம.க., உயர்மட்ட குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.
2026 சட்டசபை தேர்தலை நோக்கி தான் பயணிக்கிறோம். இருப்பினும் லோக்சபா தேர்தலையும் சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அ.தி.மு.க., உடன் கூட்டணி குறித்து இரண்டு கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. பா.ஜ., தரப்பிலும் பேசியுள்ளார்கள். லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்பினர். இதுகுறித்து ஒரு வாரத்தில் முடிவெடுப்பேன்.
40 லோக்சபா தொகுதியிலும், 234 சட்டசபை தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளோம். சபாநாயகர் அப்பாவு, சட்டசபையில் ஒரு உறுப்பினரை போல பேசி வருகிறார். அவர் சபாநாயகராக பேச வேண்டும் என்றார்.
