ADDED : நவ 30, 2024 07:44 PM
தமிழ்நாடா இல்லை காய்ச்சல் நாடா என்று கேள்வி எழுப்பு அளவிற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாற்றி வருகிறது.
பச்சிளம் குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாத ஒரு புதிய வகை கிருமி நோய் வேகமாக பரவுகிறது.
இதற்கு தமிழக அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இல்லை. இதனால் பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால், தி.மு.க., வலுவாக உள்ளது என்று யாரும் கூறவில்லை.
விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்

