ADDED : நவ 21, 2025 06:43 AM

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவி கொல்லப்பட்டுள்ளார். ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் கொண்டு வரும்போது, கட்டாய திருமணம் மற்றும் கட்டாய காதலை தடுக்கும் வகையில் ஷரத்துகளை சேர்க்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை, மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர்., படிவங்களை அரசியல் கட்சி பூத் ஏஜன்டுகளிடம் கொடுப்பதால், தவறுகள் நடக்கின்றன. இந்த பணியில், மத்திய அரசு ஊழியர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
தமிழகத்தை ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பீஹாரை பார்த்து பாடம் கற்க வேண்டும். கூட்டணி ஆட்சியும், முழு மதுவிலக்கும் தான், வரும் சட்டசபையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டினால் தான், தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கு ம். கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சியுடன் தான், புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும்.
- கிருஷ்ணசாமி
தலைவர், புதிய தமிழகம்

