ADDED : நவ 21, 2025 06:42 AM

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 33. ஆவியூர் கடமங்குளம் விலக்கில் பஞ்சர் கடைக்கு வரும் போது திருமங்கலம் கொக்குளம் பாரதிராஜ் 35, மேல உப்பிலிக்குண்டு விக்னேஷ் 34, நண்பர்கள் ஆயினர்.
கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அக்., 29ல் மணிகண்டனை அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து, கொக்குளம் ரோட்டில் பாலத்தில் வீசி சென்றனர். போலீசார் விசாரித்தனர்.
பாரதிராஜ், விக்னேஷ் போலீசில் சரணடைந்தனர். இவ்வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேல உப்பிலிக்குண்டு மதன்ராஜை 19, கைது செய்தனர். நேற்று மேல உப்பிலிக்குண்டைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் ராஜ்குமாரை 21, கைது செய்தனர். இவரது டூவீலரில் தான் மணிகண்டன் உடடைல ஏற்றி சென்றதுடன், தடயங்களை அழித்ததாகவும் இவர் மீது புகார் எழுந்தது. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

