தி.மு.க, கூட்டணியில் காங்.கிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க, கூட்டணியில் காங்.கிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
UPDATED : மார் 09, 2024 10:03 PM
ADDED : மார் 09, 2024 07:31 PM

சென்னை : தி.மு.க., கூட்டணியில் காங்கிற்கு தமிழகத்தில் 9 , புதுச்சேரி-1 என 10 தொகுதிகள் ஒதுக்கி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க, கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் இழுபறியில் இருந்தது.
இது தொடர்பாக இன்று தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.
முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 புதுச்சேரியில் 1 என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதென முடிவானது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காங். பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் ஆகிய இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதையடுத்து தி.மு.க, 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தி.மு.க., கூட்டணி விவரம்:
தி.மு.க. : 21 (நேரடியாக போட்டி )
காங்.: 9 ( புதுச்சேரி:1 )
இ.கம்யூ. :2
மா. கம்யூ : 2
வி.சி.க. : 2 (சிதம்பரம், விழுப்புரம்)
ம.தி.மு.க.: 1
கெ.ம.தே.க. 1 ( நாமக்கல்) (உதயசூரியன்)
ஐ.எம்.யூ.எல்.:1 (ராமநாதபுரம்)
என 40 தொகுதிகளுக்கும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது தி.மு.க., கூட்டணி, கடந்த ஜன., இறுதியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய கே.சி. வேணு கோபால் காங்.,ன் 10 தொகுதிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற ஒத்துழைப்பு தருவோம் என்றார்.

