ADDED : செப் 19, 2011 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சுயநிதிப்பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.
கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜ், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். இயக்குனர் ராஜாகோவிந்தசாமி, முதல்வர் நேரு, பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.