புதுச்சேரி மலர் கண்காட்சியில் 'ருசி' ஸ்டால் 2 சுவையான ஐஸ்கிரீம்கள் அசத்தலாக அறிமுகம்
புதுச்சேரி மலர் கண்காட்சியில் 'ருசி' ஸ்டால் 2 சுவையான ஐஸ்கிரீம்கள் அசத்தலாக அறிமுகம்
ADDED : பிப் 11, 2024 02:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ருசி ஸ்டாலில், இரண்டு சுவையான ஐஸ்கிரீம் வகைகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் மலர், காய் கனி கண்காட்சி துவங்கியது. இரண்டாம் நாளாக நேற்றும் கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள உணவு அரங்கில், வித விதமான உணவு வகைகளை, குடும்பத்துடன் ருசித்தனர்.
உணவு அரங்கில் அமைந்துள்ள 'ருசி' ஸ்டாலில் கூட்டம் கூட்டமாக மக்கள் மொய்க்கின்றனர். குறிப்பாக கல்லுாரி மாணவிகள், குட்டீஸ்களின் கூட்டம் அலைமோதியது. அவர்களில் பெரும்பாலானோர் கைகளில் ருசியான ருசி 'குல்பி மற்றும் ஐஸ்கிரீம் வகைகள்.
அதிலும், பல டீனேஜ் பெண்கள், கையில் குல்பி வைத்துக் கொண்டு ஒய்யாரமாக, ஜாலியாக வலம் வந்து, சூப்பர்... செம டேஸ்ட் என்றபடி, சுவையில் கரைந்தனர்.
செல்பி பாயிண்ட்
அத்துடன் ருசி செல்பி பாயிண்ட்டில் கூட்டத்தோடு செல்பி எடுத்து, செல்பி வித் குல்பி என்று வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்டிவிட்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ருசியான குல்பி வெயிலுக்கு இதம். உடலுக்கு நலம் என்று சொன்னால் மிகையில்லை.
கரைந்துபோய்.....
நாவிற்கு சவால் விடுக்க ருசி அரங்கில் 50க்கும் மேற்பட்ட குல்பி, ஐஸ்கிரீம் வகைகள் வரிசை கட்டி உள்ளன. நேற்று பால் ஐஸ்கிரீம், குல்கந்து ஐஸ்கிரீம் என இரண்டு அசத்தலான ஐஸ்கிரீம்கள் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
குட்டீஸ்கள் முதல் தாத்தா-பாட்டி வரை போட்டி போட்டுக்கொண்டு, ஆளாளுக்கு வாங்கி சுவைத்து, அதன் சுவைகளில் மெய் மறந்தனர். சுவையில் அனைவரையும் கரையச் செய்து, மெய்மறக்க செய்யும் ருசியான இந்த இரண்டு ஐஸ்கிரீம் வகைகள் ஜஸ்ட் 15 ரூபாய் மட்டுமே.
தாவரவியல் கண்காட்சி இன்று (11ம் தேதி) நிறைவு பெறுகிறது. அதனால் தாமதிக்காமல் வாங்க. ருசியான குல்பி, ஐஸ்கிரீம்களை சாப்பிட்டு மகிழுங்க...