sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அம்பேத்கர் - ஈ.வெ.ரா., ஒப்பீடு சரியா? சீமான் சரமாரி கேள்வி

/

அம்பேத்கர் - ஈ.வெ.ரா., ஒப்பீடு சரியா? சீமான் சரமாரி கேள்வி

அம்பேத்கர் - ஈ.வெ.ரா., ஒப்பீடு சரியா? சீமான் சரமாரி கேள்வி

அம்பேத்கர் - ஈ.வெ.ரா., ஒப்பீடு சரியா? சீமான் சரமாரி கேள்வி


ADDED : ஜன 10, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 10, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:''அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது போல வேறு முரண்பாடு கிடையாது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்னார்.

புதுச்சேரியில் அவர் அளித்த பேட்டி:

'முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் நமக்கு எதிரிகள். இந்த கும்பல்கள் நமக்கு எதிரானவர்கள், நம்மில் கீழானவர்கள்' என்று சொன்னவர் யார்? அவர் எப்படி பெரியாராக இருக்க முடியும்? நம்மில் கீழானவர் யாரும் இருக்கக்கூடாது.

இருந்தால் அவர்களை உயர்த்திவிட வேண்டும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இருக்கக்கூடாது என்பது தானே, சமதர்ம சமூக கோட்பாடு. அதுதான் சமூக மாற்றம். சமூக முன்னேற்றம், சமூக சீர்திருத்தம்.

எதிரிகள்


ஆனால், அவர் என்ன சொன்னார்? நம்மில் கீழானவர்கள் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள். இவர்கள் எல்லாம் எதிரிகள் என்றார்.

இதைவிட கொடிய தீண்டாமை சிந்தனை வேறு உண்டா? இந்த பெரியார் கோட்பாடு தான் எங்கள் வழி என்று தி.மு.க., எப்படி சொல்கிறது? இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் படித்ததால் தான், நமக்கு வேலை இல்லாமல் போனது என்று அவர் சொன்னதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்?

முகமதியர்களுக்கு என்று கூட அவர் சொல்லவில்லை. துலுக்கர்களுக்கு என்றார். அவர்களுக்கு கொடுத்த இடஒதுக்கீடு சாணியில் கால் வைக்க பயந்து மலத்தில் கால் வைத்ததற்கு சமமாகி விட்டது என்றும் சொன்னார். தமிழ், தமிழ் அரசு என்று பேசுவதெல்லாம் பித்தலாட்ட, கருங்காலிகள் என்றார். தமிழர் என சொல்வதே இன துவேஷம்; அப்படி பேசுவோர் இன எதிரிகள் என்றார்.

மூவாயிரம் வருஷமாக இருக்கிற தமிழ்த்தாய் உங்களை படிக்க வச்சாளா என்று கேட்டவர். தமிழ் இலக்கியங்களை குப்பை என்றார். வள்ளுவன் ஒரு முட்டாள் பையன். கம்பன் ஒரு முட்டாள் பையன். இளங்கோ ஒரு எதிரி என்றார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு இது. 'யாம் அறிந்த புலவரிலே கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, இது வெறும் புகழ்ச்சி இல்லை' என்றான் பாரதி.

ஆனால், அவர்களை முட்டாள்கள் என்கிறார் இவர். இவரை பெரியார் என்று சித்தரித்து இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்றுவீர்கள்?

அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது போல வேறு முரண் உண்டா? இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகில் ஆகச்சிறந்த கல்வியாளர். இவர் என்ன படித்தார்? மனதில் தோன்றியதை எல்லாம் பேசி விட்டு போனார்.

இவர் சிந்தித்தது, பேசியது எல்லாம் தமிழ் இனத்திற்கு எதிரானது. தமிழ் ஒரு சனியன். தமிழில் என்ன இருக்கிறது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று கூறினார்.

இந்த உண்மைகளை எல்லாம் பேசினால், ஆதாரம் காட்டு என்று என்னை கேட்கின்றனர். பேச்சு வெளியான ஆதாரங்களை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு, ஆதாரத்தை காட்டு என்று என்னை கேட்கிறீர்கள்.

மறைத்து வைத்ததை வெளியிடுங்கள், அதிலிருந்து நான் ஆதாரத்தை எடுத்துக் கொடுக்கிறேன். நாங்கள் வெளியிட்ட ஆதாரம் போதவில்லை என்றால், அவர் எழுதியது மொத்தத்தையும் அரசுடமை ஆக்கிவிட்டு என்னிடம் வாருங்கள் தருகிறேன்.

இதுவரை திராவிடம் அது, இது என பேசி ஏமாற்றியே காலத்தை ஓட்டி விட்டீர்கள். இன்று காலம் மாறி விட்டது. மக்கள் ஏமாற தயாரில்லை.

பார்ப்பானும் எதிரி, துலுக்கனும் எதிரி, அவன் வேறு நாட்டவன் என்று சொன்னவரை வழிகாட்டி என்கிறீர்கள். இதைத்தானே ஆர்.எஸ்.எஸ்., சொல்கிறது, பா.ஜ., சொல்கிறது. ஆனால், என்னை போய் ஆர்.எஸ்.எஸ்., ஆள் என்கிறீர்கள்.

என் மொழியே இழிவு. அது ஒரு சனியன் விட்டு ஒழி என்று சொன்ன உங்கள் கோட்பாடு இனி எடுபடாது. மொழிதான் எல்லா இனத்திற்கும் கலை, பண்பாடு, வழிபாடு, வரலாறு, அறிவியல், அரசியல் தருவது. அந்த மொழியே இல்லை என்றால் என்ன சமூகம், சீர்திருத்தம் இருக்கிறது?

என்னை பெரியாருக்கு எதிரி என கற்பித்தீர்கள். நீங்கள் என் இன முன்னோர்களை, அடையாளங்களை, பெருமைகளை மறைக்கும் போது அதை ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது.

கோபம் வருகிறது


பெரியார் பெண்ணுரிமை பேசினார், சாதி ஒழிப்பு பேசினார், சீர்திருத்தம் பேசினார் என்று நீங்கள் சொன்னால், நாங்கள் பாட்டுக்கு போயிருப்போம். பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்று, கதைக்கும் போது தான் கோபம் வருகிறது.

அவருக்கு முன்னால் ௧,000 ஆண்டுகளுக்கு முன்பே இதெல்லாம் பேசிய பெரியவர்களை நீங்கள் மறைக்க பார்க்கிறீர்கள். அதை எப்படி அனுமதிக்க முடியும்?

என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார் அவர்? பெரியாருக்கு கொள்கையே இல்லை. வள்ளலார், வைகுண்டரை தாண்டி என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார்?

சிங்கார வேலர், ஜீவானந்தம், அயோத்திதாச பண்டிதர், இரட்டமலை சீனிவாசன், மறைமலையடிகள், அண்ணல் தங்கோ, இவர்கள் எல்லாம் ஒன்றுமே கிடையாதா? முத்துராமலிங்க தேவர், காமராஜர், கக்கன், வ.உ.சி., இவர்கள் எல்லாம் ஒன்றும் செய்யவில்லையா? பெரியார் இல்லை என்றால் ஒன்றும் இல்லை என்கிறீர்கள். பெரும் சொத்துக்கு அதிபதியான பெரியார், அதற்கு வாரிசு தேடி 72 வயதில், 26 வயது பெண்ணை திருமணம் செய்தார்.

ஆனால், வ.உ.சி., தன் சொத்தையெல்லாம் நாட்டுக்காக விற்று செலவழித்து கப்பலோட்டிய தமிழன். செக்கிழுத்து சிறைப்பட்டு, வறுமையில் மண்ணெண்ணை விற்று பிழைப்பு நடத்திய திருமகன். அவர் பெரியாருக்கு கடிதம் எழுதினார். தன் மகனுக்கு போலீஸ் வேலைக்கு சிபாரிசு செய்ய சொன்னார்.

அந்த கடிதத்தை படம் போட்டு வைத்துள்ளீர்கள். எதற்கு? வ.உ.சி.,யே என்னிடம் வேலை கேட்டார் என பெருமைகாட்டவா? அவரும், நீங்களும் ஒன்றா. சொத்தை நாட்டிற்காக அழித்தவன் வ.உ.சி., நீங்கள் சொத்துக்கு வாரிசு தேடிய முதலாளி.

பெரியாரை என் தாத்தா என்று சொன்னாயே என்று கேட்கிறார்கள். ஆமாம், சொன்னேன். அது அறியாமை. இப்போது திருந்தி விட்டேன். படிக்க படிக்க தெளிவு வருகிறது. திருட்டு பயல்கள் யார் என்று புரிகிறது. அன்று தெளிவு இல்லை.

இன்று தெளிவு பெற்றதால் மாற்றி பேசுகிறேன். இதைத்தான் கண்ணதாசன் கூறினார். திராவிடம் என பேசுபவனை ஒழிப்பது தான் சீமானின் கொள்கை. பெரியாரை எதிர்ப்பது தான் என் கொள்கை.

இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us