பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி
பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி
UPDATED : ஏப் 11, 2025 07:32 PM
ADDED : ஏப் 11, 2025 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பல்லடம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸில் முருகனின் மனைவி கல்யாணி உள்பட 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நோயாளி முருகன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.