உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 25, 2025 04:10 AM

அ நிறம் | அளவு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு 7:00 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
ஏற்கனவே, பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால், அ.தி.மு.க.,வினர், அந்த வாகனத்தை வழி மறித்தனர். உள்ளே, நோயாளி யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தனர்.
வேண்டுமென்றே பழனிசாமி கூட்டத்துக்குள் ஆம்புலன்சை ஓட்டி வருவதாக கூறி, ஆம்புலன்ஸ் மீது கைகளால் குத்தி டிரைவருடன் தகராறு செய்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, டிரைவர் தெரிவித்தார். உடனே, போலீசார், அ.தி.மு.க., வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.
