ADDED : செப் 04, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலர் இருளாண்டி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
வரும், 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டி.ஜி.பி., பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.