sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக குறைப்பு

/

ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக குறைப்பு

ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக குறைப்பு

ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக குறைப்பு


ADDED : ஆக 15, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 15, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க, 'அவசரம் 108' என்ற மொபைல் செயலியை பயன்படுத்துவதன் வாயிலாக, ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றடையும் நேரம், 11 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை தமிழகத்தில், இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் வாயிலாக, 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுதும், 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு, 40 இருசக்கர ஆம்புலன்ஸ் இயக்கப் படுகின்றன. இப்பணியில், 7,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் அழைப்பு வந்த, 8 நிமிடங்களிலும், மற்ற மாவட்டங்களில், 13 நிமிடங்களிலும், 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைத்து வந்தது. இந்த கால அளவை குறைக்க, 'அவசரம் 108' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில், 'மேப்' எனப்படும் வழித்தட வரைபடத்துடன் கூடிய, தகவல் பரிமாற்ற வசதி உள்ளதால், காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை, மாநில செயல்திட்ட தலைவர் செல்வகுமார் கூறிய தாவது:

சாலை விபத்துக்கு உள்ளானோர் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நி மிடமும் முக்கிய மானது .

பதற்றம் தற்போது, 108 உதவி மையத்துக்கு அழைப்பவர்கள், தங்கள் பெயர், மாவட்டம், ஊர், விபத்து உதவி அல்லது மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களை வாய்மொழியாக தெரிவிக்க வேண்டும்.

சில நேரங்களில் பதற்றம் அல்லது அறியாமை காரணமாக, அவர்களால் தகவல்களை சரியாக கூற இயலாது. இதனால் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 'அவசரம் 108' செயலி அறிமுகப் படுத்தப்பட்டது.

இதில் உதவி தேவைப்படும் இடத்தை தெரிவித்தால், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைவாக செல்ல முடிகிறது.

மேலும், பயனாளி ஆம்புலன்ஸ் வாகன எண், ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் மொபைல் எண்களை, செயலி வாயிலாக அறிய முடியும்.

இந்த புதிய நடைமுறையால், 13 நிமிடங்களாக இருந்த ஆம்புலன்ஸ் சேவையின் வருகை நேரம், தற்போது 11 நிமிடங்களாக குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us