sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்

/

தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்

தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்

தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்

1


ADDED : பிப் 26, 2025 10:24 PM

Google News

ADDED : பிப் 26, 2025 10:24 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: “தேச விடுதலையின்போது வல்லபாய் படேல் செய்ததை, அமித் ஷா தற்போது செய்து, தேசத்தை மறு ஒருங்கிணைப்பு செய்துள்ளார்” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு புகாழரம் சூட்டினார்.

கோவை, ஈஷா யோகா மையத்தில் நடந்த, 31வது மஹாசிவராத்திரி விழாவில் அவர் பேசியதாவது:நாடு விடுதலையடைந்த காலகட்டத்தில், அப்போதைய உள் துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், ஒரு தேசமாக இதைக் கட்டமைத்தார். அதன் பிறகு, ஒரே தேசம் என்பது ஆவணங்களில் இருந்தாலும், பல வழிகளில், அரசியல் காரணமாக அது முழுமையாக இல்லை. இப்போதைய உள் துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேலைப் போன்றே செயல்பட்டு, தேசத்தை ஒருங்கிணைத்திருக்கிறார்.

கடந்த காலங்களில் வெவ்வேறு நகரங்களில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக அப்படியான தகவல்களை நாம் கேட்பதில்லை. தீவிரவாத அச்சுறுத்தலையும் வரும் 2026க்குள் வேரறுப்பதாக அமித் ஷா உறுதி பூண்டுள்ளார். அதற்கும் தீர்வு கிடைத்துவிடும்; நாங்கள் உங்களுடன் உள்ளோம்.

நமது உள் துறை அமைச்சர் தேசத்தை மறு ஒருங்கிணைப்பு செய்துள்ளார். வரலாற்று ரீதியாக நாம் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்திருக்கிறோம். யாரையும் குற்றம் சொல்லவில்லை. அன்றைய சூழல் அப்படி இருந்திருக்கலாம்.370வது சட்டப்பிரிவை நீக்கி, நம் நாட்டின் இயல்பான ஒரு பகுதியாக காஷ்மீர் மாற்றியிருக்கிறார். காஷ்மீர் சுற்றுலாத் தளமாக மாறியிருக்கிறது. அங்கு கோல்ப் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

நாட்டின் புவிசார் இறையாண்மை, சட்டம் ஒழுங்கை முறையாக இல்லை என்றால், பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், ஆன்மிகம் உள்ளிட்ட மற்றவை வீணாகிப் போகும். உள் துறை அமைச்சகப் பொறுப்பு என்பது எளிதில் அங்கீகாரம் கிடைத்துவிடாத ஒரு பணி. மென்மையாகக் கையாண்டால், மோசம் என்பார்கள். சரியாக நடவடிக்கை எடுத்தால், அதிகபட்ச கெடுபிடி என்பார்கள்.

நாட்டின் அமைதி பேணுவதில் நிறைய பேருக்கு, அமைப்புகளுக்கு பங்கு இருப்பினும், அதை தலைமையாக இருந்து வழிநடத்துபவர் என்ற வகையில் உள் துறை அமைச்சருக்கு மிக்க நன்றி.மஹா சிவராத்திரியில் பங்கேற்க சமயம் முக்கியமில்லை. கிறிஸ்தவர்கள் வர வேண்டாம், முஸ்லிம்கள் வர வேண்டாம், ஹிந்துக்கள் அறவே வர வேண்டாம். மனிதர்கள் மட்டும் வந்தால் போதும்.

யோகக் கலை, சிவராத்திரி என்பது மானுடத்தின் கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால், ஆதியோகி உங்களுக்கானவர். நல்நிலை எய்த, சொர்க்கத்தையோ, சடங்குகளையோ வேறெங்கோ பார்க்க வேண்டியதில்லை. உள்நோக்கிப் பார்த்தால் போதும். உள்நோக்கிப் பார்க்கும் அறிவியல்தான் யோகக் கலை. ஆகியோகியின் 112 வழிமுறைகளில் இது உள்ளது. ஆதியோகி தரும் அறிவு என்பது கடந்த காலத்தை நினைவுபடுத்த அல்ல; எதிர்காலத்துக்கான உத்தரவாதம்.முதன்முறையாக, பூசாரிகள், மதகுருக்களை நம்பியிருப்பதை விட்டுவிட்டு மக்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கியுள்ளனர். ஆதியோகியின் அணுகுமுறை என்பது, தர்க்க ரீதியிலானது; அறிவியல் பூர்வமானது. அவரது படிப்பினைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்றைய சூழலுக்கானது.

மனித உடல்தான் இருப்பதிலேயே தொழில்நுட்பச் சிக்கல் மிகுந்தது. இதைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால், நல்நிலை என்பதே இல்லை. ஆதி யோகியின் அணுகுமுறை அதைக் கற்றுத் தருகிறது. ஆதியோகி இங்கு இருக்கிறார். பெங்களூருவில் உள்ளார். நாட்டின் இதர பகுதிகளிலும் ஆதியோகி சிலை நிறுவப்படும்.எந்த சமயம், ஜாதியாக இருந்தாலும், மஹாசிவராத்திரி அனைவருக்கும் பொதுவானது.இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us