காங்., செய்தித்தொடர்பு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்
காங்., செய்தித்தொடர்பு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்
ADDED : பிப் 26, 2024 04:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு துறையின் தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக காங்.,க்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மாநில துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமனையும், மாநில பொதுச் செயலாளர்களாக செல்வம், தணிகாசலம், அருள் பெத்தையா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

