ADDED : அக் 06, 2025 07:36 AM

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் ஆகிய இருவரும், முன்ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனந்த், நிர்மல்குமார் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து, இருவரும் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அவற்றை கடந்த 3ம் தேதி விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஆனந்த், நிர்மல்குமார் இருவரும், முன்ஜாமின் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை, விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளில், இருவர் தரப்பு வழக்கறிஞர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -