ADDED : ஆக 02, 2025 07:34 AM
சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி தன் இரண்டாம் கட்ட நடைபயணத்தை, வரும் 7ம் தேதி துவக்குகிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அவரது பிறந்த நாளான கடந்த ஜூலை 25ம் தேதி முதல், 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற முழக்கத்துடன், சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணத்தை அன்புமணி துவக்கினார்.
நேற்று வரை 10 சட்டசபை தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர், வரும் 4ம் தேதி திருப்பத்துாரில் முதற் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.
அதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பயணத்தை, வரும் 7ம் தேதி துவக்குகிறார்.
அன்று முதல் வரும் 18ம் தேதி வரை, வந்தவாசி, செய்யாறு, பென்னாத்துார், போளூர், திண்டி வனம், செஞ்சி, மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, பர்கூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார் என, பா.ம .க., தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

