அன்புமணியால் ஆபத்து ராமதாஸ் உதவியாளர் டி.ஜி.பி.,யிடம் புகார்
அன்புமணியால் ஆபத்து ராமதாஸ் உதவியாளர் டி.ஜி.பி.,யிடம் புகார்
ADDED : ஏப் 24, 2026 06:19 PM
சென்னை:'பா.ம.க., தலைவர் அன்புமணியால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், என் குடும்பத்திற்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி., அலுவலத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:
பா.ம.க., தலைவர் அன்புமணி, அவரது மேலாளர் சசிகுமார் வாயிலாக, என் மீது பொன்னேரி நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டு உள்ளன.
அன்புமணி, அவரது மனைவி சவுமியா, ராயபுரம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ., சேலம் கார்த்தி, வழக்கறிஞர் வினோபாவா, அன்புமணி மேலாளர் சசிகுமார் ஆகியோரால், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இருமுறை டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்புமணி மேலாளர் சசிகுமார் தொடர்ந்த வழக்கில், வரும் 27ம் தேதி நான் கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறேன். அப்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
