ADDED : மே 09, 2025 09:43 PM
சென்னை:அங்கன்வாடி மையங்களுக்கு, நாளை முதல், 25ம் தேதி வரை, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, நடப்பாண்டு நாளை முதல், 25ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, குழந்தைகள் மையங்களுக்கு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலங்களுக்கு, 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட, முன்பருவக் கல்வி பயிலும், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, தற்போது வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான, 50 கிராம் சத்து மாவை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு 750 கிராம் சத்து மாவை, கோடை விடுமுறை துவங்குவதற்கு முன், வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில், பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
மே மாதம் குழந்தைகள் வருகை, 50 சதவீதம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த அளவிற்கு மட்டுமே, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கூடுதல் தேவை ஏற்பட்டால், அது குறித்து தனியே பரிசீலிக்கவும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, சமூகநலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளிதரன் வெளியிட்டுள்ளார்.