தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எறும்புத்தின்னி பறிமுதல் வனத்துறை நடவடிக்கை

எறும்புத்தின்னி பறிமுதல் வனத்துறை நடவடிக்கை

எறும்புத்தின்னி பறிமுதல் வனத்துறை நடவடிக்கை


UPDATED : அக் 03, 2026 01:37 AM

ADDED : அக் 03, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:37 AM ADDED : அக் 03, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருப்பூரில் கடத்தி வரப்பட்ட எறும்பு தின்னியை, வனத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வன உயிரின கடத்தலை தடுக்க, வன உயிரின குற்றத்தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. வன உயிரின கடத்தல் தொடர்பான, ரகசிய தகவல்கள் அடிப்படையில், இந்த அமைப்பு கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் வனச்சரக பகுதியில் நான்கு பேர், எறும்பு தின்னியை கடத்தி செல்வதாக, தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கண்காணிப்பில் ஈடுபட்ட, வன உயிரின குற்றத்தடுப்பு அமைப்பு அதிகாரிகள், திருப்பூரில் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணை முடிவில், அவர்களிடம் இருந்த எறும்பு தின்னியை பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த நான்கு பேர் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us