உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 24, 2026 04:00 AM

அ நிறம் | அளவு
மூணாறு: கேரளாவில் இந்தாண்டு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. மூணாறு போன்ற மலை பகுதிகளிலும் பகலில் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கிறது.
இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டதால் வெப்பத்தை தாங்க முடியாமல் விலங்குகள் தவிக்கின்றன. வனத்துறை முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாததால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடுகின்றன. காட்டு யானைகள் கூட்டமாக நீர்நிலைகளை தேடி அலைகின்றன.
