மாணவி புகார் மீது நடவடிக்கை அண்ணா பல்கலை பதிவாளர் தகவல்
மாணவி புகார் மீது நடவடிக்கை அண்ணா பல்கலை பதிவாளர் தகவல்
UPDATED : டிச 26, 2024 02:15 AM
ADDED : டிச 26, 2024 02:12 AM

சென்னை: 'சென்னை அண்ணா பல்கலை மாணவி அளித்த, பாலியல் சீண்டல் புகாரின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது' என பல்கலை பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை, அண்ணா பல்கலை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன், கல்லுாரி வளாகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர், தன் நண்பரை தாக்கி, தன்னிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக, நேற்று முன்தினம் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் தலைமையில், மகளிர் காவல் நிலையக் குழுவினர் வழக்கை விசாரிக்கின்றனர். இது குறித்து, அண்ணா பல்கலை உள் புகார் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.
காவல் துறையினர் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும்படி, உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, பல்கலை நிர்வாகம் காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.
பல்கலை வளாகத்தில், பாதுகாப்பு பணியாளர்கள், எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலையில், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவி.செழியன்
உயர்கல்வித்துறை அமைச்சர்