sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

/

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

3


ADDED : ஜூன் 12, 2025 10:15 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:15 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறை வழக்கில் , முறையான விசாரணை நடைபெறவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான், உண்மையில் என்ன நடந்தது என்பது முழுமையாக வெளிப்படும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிஆர்ஓ நடராஜன் சொல்லக்கூடிய கருத்துக்கு பதில் கருத்து வைக்கிறேன். சகோதரர் மரணம் தொடர்பாக தான் திமுக வசெ., கோட்டூர் சண்முகம் என்னுடன் பேசினார். வேறு ஏதும் பேசவில்லை என்கிறார்.

டிச., 24 ம் தேதிதான் பல பிரச்னைகள் நடந்தது. அன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் ஞானசேகரனை கைது செய்து அன்றைய தினம் விடுவித்தனர். அன்று காலை, கோட்டூர் சண்முகத்திற்கு முதலாவதாக, மா.சுப்பிரமணியத்தின் உதவியாளர் துளசி தொலைபேசியில் அழைத்தார். பிறகு பல விஷயங்கள் நடக்கிறது. அன்று மாலையே மா.சுப்பிரமணியமும், கோட்டூர் சண்முகமும் நேரடியாக பேசினர்.

24ம் தேதி ஞானசேகரன் வெளியில் வருகிறார். இரவு 8:32 மணிக்கு கோட்டூர் சண்முகத்திடம் மா.சுப்பிரமணியன் பேசினார். பிறகு, அடுத்ததாக கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை முன்னாள் பிஆர்ஓ நடராஜனிடம் தொலைபேசியில் பேசினார்.8:34 மணிக்கு கோட்டூர் சண்முகமும், நடராஜனும் பேசினார். சிறப்பு புலனாய்வு குழு என்னிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை, நீதிமன்ற விசாரணை யாருக்கும் தெரியாது.தீர்ப்பு வந்த பிறகு தான், இரண்டு தரப்பும் வழக்கறிஞர்கள் சொல்வதை வைத்து தான், என்ன ஆதாரம் வைத்துள்ளனர். வைக்கவில்லை என தெரியும்.

பாலியல் விவகாரத்திற்கு பிறகு, ஞானசேகரன் கிண்டி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ குணசேகர கண்ணனிடம் பேசினான். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை. அன்றைய தினம் அவரிடம் இரண்டு முறை பேசி உள்ளான். அது குறித்து அரசு எஸ்ஐடி பதில் சொல்ல வேண்டும்.

24ம் தேதி ஞானசேகரன் போலீஸ் ஸ்டேசன் செல்லும்போது கோட்டூர்புரம் எஸ்ஐ கோவர்தன் தொடர்ச்சியாக கோட்டூர் சண்முகத்திடம் ஏன் பேச வேண்டும். அன்று பேசவில்லை. இன்று சொல்கிறேன்

சம்பவம் முடிந்து அடுத்த 5 நாட்கள்பேசவில்லை. 24ம் தேதி கோட்டூர் சண்முகத்திடம் பேசுகிறார். எதற்கு பேசுிகறார். துளசி ஏன் சண்முகத்திடம் பேச வேண்டும். 25ம் தேதி தான் சம்பவம் நடந்தது தெரியும்.24 ம் தேதி போலீஸ் நடவடிக்கையின் போது ஏன் இவ்வளவு உரையாடல் நடக்கவேண்டும்.

சகோதரர் இறந்தது என பேசினேன் என நடராஜன் சொன்னால், அதனை ஏற்க முடியாது. அழைப்பு வந்த விதம், பல்கலை.,யில் இருக்கும் ஆளுமை, ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு உள்ளநுழைவு வாயிலில் அதிகாரம் இருக்கின்றன. நீதிமன்றம் செல்லட்டும். அப்போது அது தெரியும். நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்கிறேன்

அண்ணா பல்கலை மாணவியின் வழக்கறிஞரை கண்டுபிடித்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளேன்.சிபிஐ விசாரணை கேளுங்கள் என சொல்வேன். சிபிஐ முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட மொபைல்போனில், வேறு வீடியோ இருந்தது. அந்த வீடியோவில் இருப்பவரை கண்டுபிடிக்க எஸ்ஐடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தடயவியல் சோதனையில் மற்றொரு வீடியோவும் இருந்தது. அதில் இருந்த பெண்ணை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பட்டும் பதில் சொல்கிறேன்.

நீதிமன்றத்தை பொறுத்தவரை, போலீசாரின் குற்றப்பத்திரிகை, ஆதாரத்தை வைத்துதீர்ப்பு சொல்கின்றனர். வேறு எதுவும் தெரியாது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு என்னிடம் மிரட்ட வேண்டாம். இந்த வழக்கு சி.பி.ஐ.,யிடம் செல்ல வேண்டும். வேறு யாரும் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை. பாதிக்கப்பட்ட மாணவியை மேல்முறையீடு செய்ய வைக்க நான் தனிப்பட்ட முறையில் இறங்கி உள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

ஆதரவு

இதனிடையே கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், கோவையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, நான்காவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை இன்று நேரில் சென்று சந்தித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 62, துப்புரவு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு, ரூ.770 சம்பளம் வழங்க அறிவுறுத்திய சூழலில், மாநகராட்சி நிர்வாகம், ரூ.540 மட்டுமே வழங்கி வருவதாகத் தெரிகிறது.

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் பணியாற்றும் 5,668 தூய்மைப் பணியாளர்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், இதுவரை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம ஊதியம் வழங்கும் அரசாணை எண் 62 ஐ அமல்படுத்துவதோடு, அவர்களுக்கான சம்பள ரசீது, இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவற்றையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us