ADDED : ஜூலை 31, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசு பஸ்சில் இரண்டு பேர் சேர்ந்து, பட்டாக்கத்தியால் ஒருவரை தாக்கும் வீடியோவை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து, அவரது அறிக்கை:
அரசு பஸ்சில் பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதுதான் தமிழகத்தில், தி.மு.க., அரசின் சட்டம் - ஒழுங்கு நிலை.
இன்று, பொது இடங்களில் பாதுகாப்பு என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இது, கனவாக மாறி வருகிறது. கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சி, தமிழகத்தை, 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.