டில்லி புறப்பட்டார் அண்ணாமலை; அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்
டில்லி புறப்பட்டார் அண்ணாமலை; அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்
ADDED : மார் 27, 2025 06:59 AM

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று டில்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திடீரென டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, தமிழக அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பை தொடர்ந்து, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைய இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களும் இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.