ADDED : டிச 05, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டில்லியில் நேற்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரை சமீபத்தில் அண்ணாமலை சந்தித்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இரு தினங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் டில்லி சென்று, அமித் ஷாவை சந்தித்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று அமித் ஷாவை, அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, வரும் சட்ட சபை தேர்தலுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, அண்ணாமலைக்கு அமித் ஷா ஆலோசனைகள் சொன்னதாக கூறப்படுகிறது.

