sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

/

அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

அண்ணாமலையா... நயினார் நாகேந்திரனா? நாளை தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல்

18


ADDED : ஏப் 11, 2025 05:56 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:56 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, இன்று விருப்ப மனு பெறப்படுகிறது. நாளை(ஏப்.,12) புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார்.

அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ.,வில், 67 மாவட்டங்கள் உள்ளன. அக்கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

தாமதமானது


இந்தாண்டு ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு, ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட இருந்தது. டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது.

அண்ணாமலையே மாநில தலைவராக மீண்டும் நியமிக்கப்பட இருப்பதாக பா.ஜ.,வினர் கருதிய நிலையில், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா களமிறங்கினார்.

அண்ணாமலையை டில்லிக்கு அழைத்து பேசிய மேலிடத் தலைவர்கள், 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு உடன்பட்டால், நீங்கள் மாநில தலைவராக தொடரலாம்; இல்லையெனில், புதிய தலைவர் நியமிக்கப்படுவார்' என, தெரிவித்தனர்.

இதனால், அண்ணாமலை தலைவராக தொடர்வாரா அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடை காணும் வகையில், மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலை நடத்த, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:


மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்ப மனுக்களை, கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

அரசியல் நிலவரம்


தமிழகத்திற்கான தேசிய தேர்தல் அதிகாரியும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி முன்னிலையில் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நாளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:


சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை வரை சென்னையில் இருப்பார். அமித் ஷா வருகைக்கும், மாநில தலைவர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. கட்சி தலைவர்களை சந்திக்க அமித் ஷா வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரங்களை கேட்டறிவார்.

நான்கு நாட்களுக்கு முன், பீஹாருக்கு சென்றிருந்தார். அங்கு, கட்சியின் செயல்பாடு குறித்து, தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அதேபோல் தான் தமிழகத்திலும் இருக்கும்.

உட்கட்சி விவகாரம்


தமிழக அரசின் மசோதாக்களை, கவர்னர் நிலுவையில் வைத்தது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. கவர்னர் எடுக்கும் முடிவில் உள்ள காலதாமதம் குறித்துதான் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மாநில அரசை, கவர்னர் கேள்வி கேட்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. எனவே, இது, கவர்னருக்கு பின்னடைவு இல்லை.

பா.ம.க.,வை பொறுத்தவரை உட்கட்சி விவகாரம்; கருத்து கூற ஒன்றுமில்லை. பா.ஜ.,வின் தயவுக்காக, அ.தி.மு.க., தன் ஆதரவை தமிழக மக்களிடம் இழந்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர், தி.மு.க., கூட்டணியில் சந்தோஷமாக இருக்கிறாரா என யோசிக்க வேண்டும். பட்டியலின மக்களுக்காக திருமாவளவன் போராடுகிறார் என்றால், அந்த மக்களுக்கு எதிராக நடக்கும் தொடர் குற்றங்களை, அவர் ஏற்றுக்கொள்கிறாரா? இவ்வாறு அவர் கூறினார்.

'10 ஆண்டு' குழப்பம்


மாநில தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பில், 'மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்தான், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையால், ஏற்கனவே தலைவராக உள்ள அண்ணாமலை, தலைவராக விரும்பும் நயினார் நாகேந்திரன் ஆகியோரால் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி, மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, தேவைக்கேற்ப விதிகளை தளர்த்த, கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us