ADDED : நவ 07, 2024 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அரசியல் தொடர்பான உயர் கல்வி பயில, ஆகஸ்ட், 28ல் பிரிட்டன் சென்றார். அங்கு விடுமுறை நாட்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். மூன்று மாத பயணத்தை முடித்து, வரும், 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
முதலாவதாக, அவர் கோவையில் மகளிரணி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த இரு மாதங்களாக, மாநிலம் முழுதும் பா.ஜ.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபடவில்லை என்ற, புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், இம்மாதம் இறுதியில் அண்ணாமலை வர உள்ளதால், உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., தொண்டர்களிடம் எழுந்துள்ளது.