சென்னை - சந்திரகாச்சி உட்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை - சந்திரகாச்சி உட்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : ஆக 21, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி உட்பட, மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
கோவை, போத்தனுாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாருணிக்கு, அடுத்த மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ன. பாருணியில் இருந்து, கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கும், தன்பாதில் இருந்து, கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கும், சந்திரகாச்சியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.