ADDED : ஆக 16, 2025 01:32 AM
சென்னை:பள்ளிக்கல்வித் துறை சார்பில், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2; கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பத்துார், மதுரை, சென்னை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி என, மொத்தம் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி ஆகிய பாடங்களுக்கு தலா ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம், 20 பள்ளிகளுக்கு 200 ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.