உள்ளடக்கத்திற்கு செல்ல
முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் மீது மேலும் ஒரு வழக்கு
முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் மீது மேலும் ஒரு வழக்கு
UPDATED : நவ 21, 2026 09:27 PM
ADDED : நவ 21, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி, 400 கோடி ரூபாய்கு மேல் மோசடி செய்த வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் 48, மீது, மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் மீது சென்னை, சேலம் மாவட்டங்களில், மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், மேலும் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, நாமக்கல் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
