எட்டு மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழைக்கு வாய்ப்பு
எட்டு மாவட்டங்களில் நாளை மறுதினம் கனமழைக்கு வாய்ப்பு
UPDATED : நவ 21, 2026 10:47 PM
ADDED : நவ 21, 2026 09:22 PM
சென்னை: 'தமிழகத்தில், நாளை மறுதினம்(நவ.23) எட்டு மாவட்டங்களில் கனமழை, மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும், மிதமான மழை பெய்யக் கூடும். இதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, கன மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 21 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
