ADDED : ஜூன் 07, 2025 11:08 PM
சென்னை:தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில், மே மாதம் முதல் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, தினமும் 20 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, 194 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதில், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோயாளிகள் மற்றும் முதியோர், கொரோனாவால் பாதிக்கப்படும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 79 வயதான முதியவர் ஒருவர் நேற்று இறந்துள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக படுத்த படுக்கையாக இருந்த இந்த முதியவருக்கு, நீரிழிவு நோய், சுவாச கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த இணை நோயாளிகள் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளது.