தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஜெம் கிரானைட்ஸ்' வீரமணி மீது மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு

 'ஜெம் கிரானைட்ஸ்' வீரமணி மீது மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு

 'ஜெம் கிரானைட்ஸ்' வீரமணி மீது மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு


ADDED : செப் 29, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'ஜெம் கிரானைட்ஸ்' வீரமணி மீது, மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 'ஜெம் கிரானைட்ஸ்' தொழில் வர்த்தகர் வீரமணி, 85 கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்திற்கு உடந்தையாக இருந்த, அவரது தோழி சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், 63, ஆகியோரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீரமணி யால் பாதிக்கப்பட்ட, 16 வயது மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக, அவரது தாய், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம், மாணவியின் தாய் நேற்று வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில், வீரமணி மீது நேற்று மேலும் ஒரு 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக புகார் அளிக்க விரும்புவோர், தகவல்கள் தர விரும்புவோர், சிறப்பு புலனாய்வு குழுவின், 93453 19676 என்ற 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், வீரமணியுடன் இருக்கும் படம் மற்றும் வீடியோவை, சமூக வலைதளம், இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என, சிறப்பு புலனாய்வு குழு அதிகாாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us