ADDED : மே 30, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக இருப்பவர் அன்சுல் மிஸ்ரா.
இவர், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய செயலராக இருந்தபோது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை.
இது தொடர்பாக, அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் மேல்முறையீடு செய்வதற்காக, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.