திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ADDED : மே 27, 2024 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி தணிக்கைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

