சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு
சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு
UPDATED : பிப் 01, 2024 10:44 AM
ADDED : பிப் 01, 2024 10:37 AM

சென்னை: சென்னையில் லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கிய 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ், சென்னை பிரைவேட் லிமிடெட், கேஎல்பி புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் இன்று(பிப்.,01) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது. விசாரணை முடிவில், 3 கட்டுமான நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவரும். 3 கட்டுமான நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.