பிளாஸ்டிக் தயாரிப்பு இயந்திரங்கள் சீன இறக்குமதிக்கு தடுப்பு வரி
பிளாஸ்டிக் தயாரிப்பு இயந்திரங்கள் சீன இறக்குமதிக்கு தடுப்பு வரி
ADDED : ஜூன் 28, 2025 01:02 AM

புதுடில்லி,:சீனா, தைவானில் இருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு இயந்திரத்துக்கு, மத்திய அரசு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசு தெரிவித்துஉள்ளதாவது:
பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தும் இயந்திரங்கள், சீனா, தைவான் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்வதை நிதி அமைச்சகம் கண்டறிந்து உள்ளது. இதனால், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இத்தகைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு எதிராக, பொருள் குவிப்பு வரி விதிக்க, நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு இயந்திரங்களை விற்கும் நாடுகள், தயாரிப்பு நிறுவனங்கள் அடிப்படையில், இயந்திரத்தின் மொத்த மதிப்பில், 27 முதல் 63 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். அறிவிப்பு வெளியானதில் இருந்து, பொருள் குவிப்பு தடுப்பு வரி, 5 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.