ADDED : ஆக 10, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சமீபத்தில் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அக்கட்சியின் இலக்கிய அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க., சட்ட திட்ட விதிப்படி, தி.மு.க, இலக்கிய அணி தலைவராக, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப் படுகிறார்' என, தெரிவித்துள்ளார்.
தி.மு.க., இலக்கிய அணி தலைவராக இருந்த, முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, கடந்த ஆண்டு காலமானார்.
அவர் வகித்து வந்த பொறுப்பில் அன்வர் ராஜா நியமிக்கப்பட்டு உள்ளதாக, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியும், அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.