சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கு; சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கு; சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி
ADDED : ஜன 27, 2025 05:22 PM

புதுடில்லி; சனாதன ஒழிப்பு தொடர்பாக உதயநிதி பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி, டெங்கு, மலேரியா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
அவரின் பேச்சு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்று பா.ஜ., மற்றும் இந்து இயக்கங்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே நேரத்தில் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை, அதற்கான விளைவுகளை சந்திக்க தயார் என்று உதயநிதியும் கூறி இருந்தார்.
சனாதன பேச்சு குறித்து உதயநிதிக்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய அமர்வு, அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

