தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐபோனில் கோளாறு ஆப்பிளுக்கு நோட்டீஸ்

ஐபோனில் கோளாறு ஆப்பிளுக்கு நோட்டீஸ்

ஐபோனில் கோளாறு ஆப்பிளுக்கு நோட்டீஸ்


ADDED : ஜன 24, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:ஐபோன்களின் இயக்கம் குறித்த வாடிக்கையாளர்களின் புகாரை தொடர்ந்து, விளக்கம் அளிக்குமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கு, இந்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சி.சி.பி.ஏ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்தில் இயங்குகின்றன. ஆண்ட்ராய்டு போலவே, ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது தன் இயங்குதளத்தில் அப்டேட்களை வழங்குகிறது. அண்மையில், '18 பிளஸ்' என்ற அப்டேட்டை வழங்கியது. அதை பதிவிறக்கி, தங்கள் செல்போன்களில் பயன்படுத்த துவங்கிய பின், ஐபோனின் செயல்பாட்டில் பிரச்னைகளை சந்திப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, டில்லியில் நேற்று தெரிவித்தார். தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் சி.சி.பி.ஏ., இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஐபோன்களில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் தொழில்நுட்ப பிரச்னைகள் மற்றும் இயக்கத்தில் ஏற்படும் தடங்கல் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது, கண்காணிப்பு அமைப்புகளின் பார்வை அதிகரித்துள்ளதை இது காட்டுவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் மிக முக்கிய சந்தையாக இந்தியா திகழும் நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட 'ஐ.ஓ.எஸ்., 18 பிளஸ்' அப்டேட்டுக்கு பின், ஐபோன்களின் செயல்பாட்டில் பிரச்னைகளை சந்திப்பதாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us