ADDED : அக் 26, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வீர தீர செயல் புரிந்தவர்களுக்காக, தமிழக அரசு வழங்கும், 'அண்ணா பதக்கம்' விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருது ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில், முதல்வரால் வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, இவ்விருது பெற தகுதி உடையவர்கள்.
வீர தீர செயல் புரிந்த பொதுமக்கள் மூவருக்கும், அரசு ஊழியர்கள் மூவருக்கும், இவ்விருது வழங்கப்படும். விருதாளர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் தகுதியுரை தரப்படும்.
அந்த வகையில், வரும் குடியரசு தின விழாவில், 'அண்ணா பதக்கம்' விருது பெற, தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்; டிச., 15 விண்ணப்பிக்க கடைசி நாள்.